
மகிழ்வென்பது எதில்?
மனதில் வரும் துள்ளலா?
மதி மயங்கும் மயக்கமா?
எதில் இன்பம்?
பணத்திலா? பட்டு துணியிலா?
மின்னும் பொன்னிலா?
மிதக்க வைக்கும் மதுவிலா?
இல்லை, இவை எதிலுமில்லை.
பின் எங்கே?
அன்பில் மட்டும்! அன்பில் மட்டும்
அன்பான அரவணைப்பில்!
ஆசையான பார்வையில்!
இதமான இதழ் பதிவில்!
ஈர்க்கும் அந்த புன்சிரிப்பில்!
உள்ளம் கவரும் களவில்!
ஊமை மொழியின் அர்த்தங்களில்!
என்னவனே(ளே) எனும் அழைப்பில்!!
ஏங்க வைக்கும் பிரிவில்!
அய்யம் இல்லா மனதில்!
ஒரு பிரிவின் மெலிதலில்!!
ஓராயிர கனவில்!!
@ மாதவன் 2009
8 comments:
வாவ் சூப்பர் அண்ணா
//என்னவனே(ளே) எனும் அழைப்பில்!!
ஏங்க வைக்கும் பிரிவில்//
அருமையா இருக்குண்ணா :-)
simply superb :-)
மாதவன்,
Very nice.
Keep blogging.
nalla iruku pa kavithai lines
hmm..never knew u were a poet! :) was lovely...
hhi
your poem is excellant
how come like this
if you were told to write for 10 rs you are writing for 100 rs :)
hey just for fun
really good
நன்று!
என்னுடைய " என் மனையாளே" கவிதைக்கு தங்கள் அளித்த பின்னூட்டத்திற்கும் நன்றி.
அன்புடன்
உழவன்
Post a Comment