
ஐந்தாம் குறிஞ்சியில் அமைதியான அரை நிலா நாளில் அம்மாஞ்சி கிழவன் கொஞ்ச்ம் பின்னோக்கி போனான். அதே நிலா, முன்னொரு நாளில் இவனை கவி எழுத தூண்டியத்தை கன்னத்தில் புன்னகையோட புடம் போட்டு பார்த்தான்.............
இரண்டு நாட்களுக்கு முன்னே ரயில் வண்டில் இடித்துக்கொண்டு இங்கிதமாய் அடித்துக்கொண்டும், கொண்டு வந்திருந்த கொய்யா பழங்களை பகிர்ந்துன்னி பரிகாசம் செய்தது கொண்ட பருவம் முதிர்ந்த அந்த தம்பதிகள்.......பாதி வாழ்நாள் முன்னே இவனும் இவனுக்கு வாழ்கை பட்டவளும் இடித்து விளையாடியதை இன்று நினைவில் கொண்டு வந்தன. ஏனோ, அதனினும் பாதி நாளில் வேறு யாருடனோ இருந்த அந்த இனிய நினைவுகளும் அவனை இயக்காமல் இல்லை. இரண்டும் சுகமான நினைவுகள் தான். ஆனால் அளவிலே வித்தியாச பட்டு இருந்தன
பத்து நாட்களுக்கு முன் பக்கத்துக்கு வீட்டு கதை கேட்டது நினைவில் வந்தது...அவர் பேரன், யாரோ ஒரு பெண்ணுக்காக பெற்றவரை புறந்தள்ளி புது வாழ்கை தொடங்கியதை புலம்பி சொன்னபோது, ஆறுதலாய் நாலு வார்த்தை சொல்லி அனுப்பிவைத்த பின்னே, போனவன் பெற்றோரை புறந்தள்ளினனோ, இல்லை பிடித்தவளை கரம் பிடித்தானோ என எண்ணி....பின்னது சரிஎன்று பேதை மனம் சொல்லியது.....அன்று அவனால் முடியாததை இன்று எவனோ செய்ததை இனிதே என்று ஏற்று கொண்டு மனசுக்குள்ளே வாழ்த்து சொன்னான்
முப்பது வருடங்களில் பாதிக்கும் மேலான அவள் பிறந்த நாட்கள் நினைவிலிருந்ததும் மீதி மறந்து போனதும் எண்ணி பார்த்தான். முதன்முதலாய் அவள் பிறந்த நாள் மறந்த சில நாட்களுக்கு பின் அவன் அதை நினைவில் கொண்ட நிகழ்ச்சியை நினைத்து பார்த்தான். கொண்டவளோடு கொண்ட சண்டையிலே வாழ்க்கையாய் எண்ணிய போது அவள் நினவு வராமல் இல்லை. வாழ்வு வேறு மாதிரி இருந்திருக்குமோ அவளோட என்ற எண்ணமும் வந்தது. மறந்ததன் காரணம் புரிந்தது...வாழ்க்கை சக்கரம் வேகமாக ஓடும் போது நிகழ்வுகளும், நிஜங்களும் கொஞ்ச்ம் நினவுகளை மறக்க செய்வதை உணர்ந்தான். அது தான் உண்மையும் கூட
பல வருடங்களுக்கு முன் அவள் இல்லம் சென்றபோது கல்லூரி க்கு செல்லும் மகளை அழைத்து வந்து அறிமுகம் செய்தபோது, கல்லூரி நாட்களில் இவள் இருந்ததை போல அவள் இருப்பதை எண்ணிக்கொண்டிருந்ததை அவளும் புரிந்து கொண்டு ஒரு புன்னகை செய்ததை அறிந்து கொண்டான். வாசல் வரை வந்து அவள் வழி அனுப்பிய போது எஞ்சியிருந்த காதல் வேறு பரிமாணமானாதை இருவரும் உணர்ந்தார்கள்.
இனியும் கொஞ்சம் பின்னோக்கி யோசித்தான்......அவளுக்கு திருமணம் என்ற செய்தி கேட்டபோது, தான் இயலமயாயும், பிரியமால் பிரியபோகும் உறவையும் எண்ணி வருத்த பட்ட நாட்களும் நிமிடங்களாயும்......நினவில் இருந்த அகலவே அகலாது என்று நினத்ிருந்த உறவையும், இப்போது நினைத்து பார்த்தால் அவன் மேல் அவனுக்கு சிரிப்பு வந்தது.......கால சுழற்சில் நினைவுகளாய் தான் இருக்கும் என்ற உண்மை நிஜங்களோடோ தினம் உழலும் போது
இவன் வருகை கண்டால் அவள் எழுந்ததும், இரட்டை பின்னல் எப்படி இருக்கும் என்பதர்க்கு மறுநாள் பின்னலோடு வந்து பதில் அளித்தித்தும், அவன் குடித்து மிச்சம் வைத்த தேநீர் குப்பியிலே தேங்கி இருந்த சிறு துளிகளை எச்மென்று எண்ணாமல், இதுவாது மிச்சம் வைத்தானே என்று யாருக்கும் தெரியாமல் எடுத்து குடித்தத்தை இவன் ஓரா கண்ணால் கண்டு மகிழ்ந்ததையும் இன்று நடந்தது போல எண்ணி மகிழ்ந்தான்.....
சுகமான நினைவுகளில் இவன் பறந்து கொண்டிருந்த போது..........தாத்தா என்று அழைத்து கொண்டு பேததி அவன் மடியில் அமர்ந்தாள் ஒரு நிலா கதை சொல்ல சொல்லி.........