Saturday, August 8, 2009

என்னவளின் நினைவாய்


கதவு திறந்ததும் காணாத புன்னகை
காலனி கழற்றியதும் கால்படும் தூசி
கலைந்துகிடக்கும் கட்டில் துணிகள்
கழுவாது காய்ந்த காலை தட்டு
கதவோரும் ஒட்டியிரும் துண்டு சீட்டு
காலை எழுந்தவுடன் காணாத காபி
கட்சிதமாய் வராத தொலைபேசி
கண்ணாடியில் ஊசலாடும் உன் ஒற்றை தலைமுடி
கண்கள் மூடும்போது படாத கை
.
இப்படி எல்லாமே உன்னை நினைவுபடுத்த!!
என்று வருவாய் என்ற எண்ணத்தில் நான்.
வா விரைவில்,
.
ஒரு நிமிடம் யோசிக்கையில்
வேண்டாம்.......வரும் தேதி மாற்றாதே
உன்னை நினைக்க இனி என்னவெல்லாம்
உள்ளதென்று ஒரு பட்டியல் இடுகிறேன்
வந்து வாசித்துகொள் உன் வசிகர பார்வையோடு!!!
.
.
.
(......ஊருக்கு போய் இருக்கும் என்னவளின் நினைவாய்)

13 comments:

அன்புடன் அருணா said...

அடடா...கலக்கல்ஸ்!

nila said...

உருக்குது :)

Anonymous said...

செம்ம டச்சிங்... அண்ணா.. :-)

Subha said...

அண்ணா..இவ்வளவு நாள் இல்லாத ப்ளோக் அப்டேட்..இப்போதானே புரியுது..கையில் இருந்த வளையல் யாருக்கு கழன்றுதுனு :) கவிதையின் உருக்கம்..அருமை!

Anonymous said...

ரொம்ப சூப்பர் அண்ணா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. :))))))))))))))

TKB காந்தி said...

கவிதை நல்லாயிருக்கு மேடி, ஊருக்குப் போனவங்க சீக்கரம் வருவதற்க்கு வாழ்த்துக்கள்.

Niranjana Nammalvar said...

Excellent kavithai..Sorry I dont know to write in tamil :( (Being odd man out in the comment section)

Sanjai Gandhi said...

அட அட.. உருகி உருகி எழுதி இருக்கிங்களே பாஸ்.. அழகா இருக்கு..

Praseela Nair said...

Arpudhamana varigal..

Sugirtha said...

ஆஹா! ரொம்ப நல்ல பட்டியல். உங்க மனைவி நிச்சயம் சந்தோசப் பட்டிருப்பாங்கன்னு நினைக்கறேன். :)

Maddy said...

Ellorukkm Nandri

ரவி said...

ஜனகராஜ் ஸ்டைல்ல கொண்டாடுங்கப்பா...அதை விட்டுட்டு .....

jawasurya said...

அப்பு, மெய்யாலுமேவா !!! அள்ளுதே அப்பு.

கவிதைக்கு பொய் அழகுன்னு புரியுது.

Post a Comment