Tuesday, March 3, 2009

தொடர் பதிவா? இல்லை ஒரு கல்லுல ரெண்டு மாங்காவா?

நேத்து காலைல பிரென்ட் கிட்ட இருந்து ஒரு போன். என் பொண்ணுக்கு இன்னைக்கு பர்த்டே உன்னை இன்வைட் பண்றேன்ன்னு. உடனே வய்ப்கிட்டே கால் பண்ணி ஒரு கிப்ட் வாங்க சொல்லி, ஈவிங் கார் ஸ்டார்ட் பண்ணி ரோடுல டிரைவ் பண்ணா ஒரே டிராபிக். மூணு சிக்னல் கிராஸ் பண்ணி, அப்புறம் பார்கிங் லோட் தேடி அலைஞ்சு கார் பார்க் பண்ணி லிப்ட்-ல பட்டன் தேடி கண்டுபிடிச்சி 5th ப்ளோர் சேரும்போது 15 மினிட் லேட். அங்கே ஒரு குட்டி பொண்ணு மம்மி எனக்கு பலூன் வேணும்ன்னு கேட்க, மம்மி நீ டாடி கிட்டே கேளுன்னு சொன்னாங்க. சீலிங் ல இருந்த பலூன சேர் போட்டு எடுத்து கொடுத்தார் பிரென்ட். அப்புறம் கேக் கட் பண்ணங்க. எல்லோரும் ஹாப்பி பர்த்டே டு யு ன்னு பாடினோம்.

ஒரு ப்ளேட் ல கேக் கொடுத்தாங்க, லேடீஸ் நகைய பத்தியும் குழந்தைங்க ச்டுடிஎஸ் எக்ஸாம் பத்தி பேச, ஜென்ட்ஸ் பொலிடிக்ஸ் பத்தியும் மார்க்கெட் பத்தியும் பேசினோம். கொழந்தைங்க டான்ஸ் பண்ணங்க, கேம்ஸ் விளையாண்டாங்க, ரைம்ஸ் சொன்னாங்க அப்புறம் எல்லாரும் பை சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பினோம். ஒருத்தருக்கு கார் இல்லை அதனால அவரை வீட்டு வரை
போயி ட்ரோப் பண்ணிட்டு வீடு வந்து சேரும்போது மணி நைட் 10.

என்னடா இது வழக்கொழிந்த தமிழ் சொற்கள் கேட்ட, இங்கே வேற கதையா இருக்குன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் என்ன பண்றாது. எதுவெல்லாம் தமிழ் சொல் இல்லைன்னு நீங்க பீல் பண்றீங்களோ அது எல்லாம் தான் நாமோட செந்தமிழ சாப்ட்டுட்டு இருக்கு.

பின்குறிப்பு:: தங்கச்சி ராஜி அங்கே முணுமுணுக்கறது கேட்குது, முதல உங்க பெயரை தமிழ் ஆக்கிட்டு அப்புறம் அட்வைஸ் பண்ணுங்கன்னு!!!

ராஜி மாட்டி விடமாட்டேன் ன்னு சொன்ன பிரியா அவங்கள இங்கே
மாட்டி விட்டுருக்கேன் , தொடரை தொடர!!

தொடர் பதிவா? இல்லை ஒரு கல்லுல ரெண்டு மாங்காவா? ரெண்டும்
தான். பதிவு தொடர்ந்தா மாதிரியும் ஆச்சு, நேத்து என்ன நடந்தது ன்னும் சொல்லிட்டேன் இல்லெ!!

5 comments:

ப்ரியா கதிரவன் said...

ஆஹாஆஆஆஆ ஒரு முடிவோட நெறைய பேரு கெளம்பி இருக்கீங்க போல..

Unknown said...

ஹா ஹா ஹா நல்ல பதிவு... :))






ஆமா இது என்ன?? ;))

Raich said...

Maddy,
நீங்க எதாவது வழக்கொழிந்த தமிழ் சொற்கள் சொல்லுவீங்கன்னு ரொம்ப தேடினேன் :P
ஆனால் நீங்க எல்லாரையும், இங்க சொல்லி இருக்கிற எல்லா ஆங்கில வார்த்தைகளையும் தமிழ்ல மொழி பெயர்க்க வச்சிருக்கீங்க .
இது உண்மை தான். சாதாரணமான தமிழ் வார்த்தைகள் கூட மக்களுக்கு ஆங்கிலத்துல தான் வர்றது. நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

அடடா...வழக்கொழிந்த தமிழ் சொற்கள் பதிவா...எனக்கும் என்ன எழுதணும்னு தெரிலை....உங்களை மாதிரி ஒரு ஆங்கிலப் பதிவு போட்டுர வேண்டியதுதான்....
அன்புடன் அருணா

Anonymous said...

so true maddynnaa :)
we are getting so addicted to Thanglish!!!
:((

Post a Comment